மந்தைக்களமும், ஆலங்கொட்டாரமும்

இளம்வயதில்
நான் சென்ற பள்ளிக்கூடம்
இருக்குமிடம் சோழவந்தான்
மந்தைக்களம்!

மாடுகள் மேயும் ஒருபுறம்,
வீடுகள் இருக்கும் ஆங்காங்கே,
புத்தகம் சிலேட்டு எடுத்துச் சென்று
படித்து வருவோம் கருத்துடனே!

துள்ளித் திரிந்த காலமது,
பள்ளிக் கிணற்றில் கயிறு பிடித்து
காலூன்றி, மரமும் ஏறியிறங்கி
பயமின்றி ஆடித்திரிந்த நேரமது!

என்னுடன் படித்து வந்த
பட்டாபி, சீனிவாசன், கண்ணன்,
சுப்பிரமணி, நரசிம்மன், பத்மநாபன்
என்றென்றும் நினைவில் மறவாது!

ஜார்ஜ் வாத்தியார், ஜெயகரன் வாத்தியார்,
யாரையுமே அடிக்காமல், அக்கறையாய்
விருப்புடனே பாடம் சொல்லித்தரும்
அருமையான பாங்கு மிக நன்று!!

ஆலங்கொட்டாரம் உயர்நிலைப் பள்ளியிலே
ஆர்வமுடன் சொல்லித்தந்த ஆசிரியர்கள்
கல்யாணி டீச்சர், குருநாதன், சச்சிதானந்தம்
தமிழ் ஆசிரியர்களை மறக்க முடியுமா?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-16, 10:02 pm)
பார்வை : 40

மேலே