20 =5 =16 - தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 38 - = 110

“நான் ஓதும் வேதம்
நீ கேட்க வேண்டும்
பூப்போன்ற உள்ளம்
தேளான மர்மம்
ஏன் என்று சொல்லி
என் வாய் மூட வேண்டும் !”

“யார் அந்த உறவு ?
பேரென்ன எழவு ?
தேர்ப்போன்ற அழகு
அதில் நானெதில் குறைவு ?
நீ சொன்னால் போதும்
உன் வாய் தன்னால் மூடும் !”

சீறும் பாம்பை கீரீ அடக்கும்
வாழும் நட்பை கோபம் அழிக்கும்
உன்னை அன்றி யாருமில்லை
என்னை நம்பு தீரும் தொல்லை !

தெயவம் உண்டு கண்டவர் யாரு ?
கணவனே தெய்வம் கொண்டனர் மாது
இனியும் நம்பி மோசம் போவதோ
என்னை நொந்து நாளூம் அழுவதோ


துரோகம் துளைக்கும் வேளையில்
குரோதம் ஏனடி பூங்குயில் ?
விரோதம் என்ற போர்வையில்
என்னைக் கொல்லாதே கண்ணே நான் தனி மயில் !

மெழுகாய் உருகும் உள்ளம் எனது
உன்னைக்கண்டாலே பொங்கி எழுது
வேண்டாம் உனக்கு வேறு உறவு
என் சொல்கேளு வராது பழுது !

எழுதியவர் : சாய்மாறன் (21-May-16, 10:16 pm)
பார்வை : 75

மேலே