ஆறாப்புண்
அன்பு மண்ணாகி
ஆறாப்புண்ணாகி
இருள் சூழ்ந்த விண்ணாகி
ஈரமற்ற இதயமாகி
உயிரை பறிக்கும் எமனாகி
ஊஞ்சலாடும் காதல்
எதற்காக என்வாழ்வில் ஊடுருவியது
ஏற்ற தாழ்வினை பார்த்தால்
ஐயகோ அது காதலாகாது
ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு
ஓலம் போடுதே என் மனது
ஓளடதம் தருவது நீ என்று?
ஆத்திசூடி ஆனதே
என் காதல் இன்று!