நிலமகளும் நிலாமகளும்
அந்தி மயங்கும் நேரம்
ஆதவன் முத்தமிட்டான்
மண்மகளை.
மேற்றிசை வானமே
நாணிச் சிவந்தது.
மயங்கினாள் நிலமகள்
மஞ்சத்தில் தஞ்சமானாள்.
விண்ணில் காணும்
வெண்ணிலாவோ
வெகுண்டெழுந்து
வீதிக்கு வந்துவிட்டாள்
தனியொருத்தியாக.
கோபம் கொண்டு
பொறந்த வீடு போவது
அங்கேயுமா?
ஆதவனும் நிலாவும்
எதிரும் புதிருமாய்
எப்பவும் இருப்பது
இப்பதான் புரியிது.
வழிகாட்டியது நீங்கள்
வழிபடுவது எங்கள்
குலப்பெண்கள்.