பொழிலுக்கு நன்றி
மழையோடியந்த பேருந்தின்
சன்னலோரக் கவிதையைக் காண
விழி மறுக்கச் செய்த பொழிலே..!
என் மெய் சிலிர்க்கச் செய்த
உன் சாரலாட்டு கிடைக்க
என்ன தவம் செய்தேனோ...!
ஏழேழு பிறவியின் உன்னதங்களையும்
எந்நன்றிகளாய் கலந்துவிட்டேன்
என் விழி மறுக்கச்செய்த
அச்சன்னலோர கவிதையின்
விழிகளில்....