மல்லிகை

மல்லிகை எனக்கு
நறுமணம்!
மணமிழந்த பேதைக்கு - அது
மறுமணம்! - உன்னை
பறிக்கும்போதேல்லாம்
சிரிக்கின்றாய்! - வாசம்
பறக்கும்போதேல்லாம்
சிந்தனையை
பிரிக்கின்றாய்!
எத்தனை முறை உனை
சுவாசித்தாலும்
அலுப்புதட்டுவதில்லை!
ஏனென்றால்
முகர்ந்து பார்க்கும்போதே
உன்னில்
முடங்கிப்போய்விடுகிறேன்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (23-May-16, 12:26 pm)
Tanglish : mallikai
பார்வை : 174

மேலே