என்னை உன்னால் ஜெயிக்கவே முடியாது
நான் இன்றி நீ !
#பிணம்.......
நீ இன்றி எனக்கு யோகம் அடிக்கும்
அதை யாராலும் தடுக்க முடியாது
#மரணயோகம்
நீ இன்றி நான்!
சந்தோஷமாக வாழ்வேன்
நீ சுவாசிக்கும் காற்றாக
நான் உங்கிட்ட
ஒன்னு மறச்சிட்டன்
அது என்னன்னா?
அத உன்னால பாக்கமுடியாது
என்னால உணரமுடியும்
உன்னால தான் இயங்குது
உனக்குள்ள தான் வாழுது
அது என் உசுரு.....
உனக்காக தான் ஒவ்வொரு நொடியும்
துடிக்குது
உனக்குள்ளே தான் இருக்குது
உன்னையே தான்
சுவாசிக்குது
முதலில் சுவாசம்(என் உயிர்) நிற்கும்(போகும்)
பின் ஆசுவாசம் (நீ வந்து ) பிறக்கும்(சேருவாய்)
வான் இன்றி மழை இல்லை
உயிர் இன்றி உடல்
இல்லை
நீ இன்றி நான்
இல்லவே இல்லை
நீ இன்றி என்பது
ஆவதற்குள்
நான் இன்றி போயிருப்பேன்
என்னை உங்களால்
ஜெயிக்கவே முடியாது
எமன் நடத்தும்
முடிவு ஓட்டத்தில்
எப்பொழுதும் நானே
முதலிடம் பெறுவேன்
(நீ இன்றி நான் ஏது?!.....)
~ பிரபாவதி வீரமுத்து

