பேருந்து நிறுத்தம்
எப்போது பார்த்தாலும் அந்த பேருந்தை தவற விடுவதால் கல்லூரிக்கு தினமும் லேட்டாக சென்றே சுரேஸ் க்கு fine ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது
இன்றைக்கு எப்படியேனும் அந்த பேருந்தை பிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு முடிவோடு பேருந்து நிறுத்தத்தறகு மும்முரமாக புறப்பட்டான் சுரேஷ்
பேருந்து நிறுத்தத்தை நோக்கி மூச்சு வாங்க தல தெறிக்க வேகமாக ஓடினான் சுரேஷ் இன்றைக்கும் அந்த பேருந்தை தவற விட்டு விட்டான் , அந்த பேருந்தை இன்று என்று பார்த்து நேரமாகவே எடுத்து விட்டானே பாலா போன டிரைவரும் ,கன்டெக்டரும்,பன்னிக்கு புறந்தவன் என திட்டி முனங்கினான் சுரேஷ்
ஆட்டோவில் செல்லலாம் என்றால் கஞ்சத்தனம் தடுத்தது ,கல்லூரிக்கு அப்படியே நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து வேகமாக நடக்க ஆரம்பித்தான், கல்லூரிக்கு இன்றும் லேட்டாக வந்ததால் சுரேசுக்கு இன்றும் 200 ரூபாய் fine ,, அந்த ஆயிரத்தில் இந்த 200 ம் சேர்ந்து கொண்டது ,,
இனி நாளைக்கு எப்படியேனும் அந்த பேருந்தை பிடித்தே தீருவேன் என்று திண்ணையில் வெத்தலை மென்று கொண்டிருந்த அவனது பாட்டி மீது சத்தியம் செய்தான்
நாளை அந்த பேருந்தை பிடித்தே தீர வேண்டுமென்று தனது கைப்பேசயில்,கடிகாரத்தில் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்தவன் அப்படியே தூங்க ஆரம்பித்தான் ,
காலை நான்கு மணியானது,,
பேருந்தை பிடிப்பது போல கனவு
அலார ஒலி காதை பிளந்தது தூக்கத்திலிருந்து, எழுந்தவன் ,மனதுக்குள் இன்றைக்கு அந்த பேருந்தை பிடித்ததாகவே ஆணந்தம் கொண்டான்
வேகவேகமாக படுக்கையை விட்டு எழுந்து ,பல் துளக்கி விட்டு
குழிக்க ஆரம்பித்தான் ,குழித்தவன் ஆடையை மாற்றிக் கொண்டு , காலை உணவை அருந்தி விட்டு பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை
நோக்கி நேரமாகவே புறப்பட்டான் ,
ஏழு மணிக்கே சுரேஷ் பேருந்து நிலையத்தை வந்தடைந்தான் , இன்றைக்கு அந்த பேருந்து எப்படி என்னிடமிருந்து தப்பித்து விடுகிறது என்று நானும் பார்க்கிறேன் என்று ,பேரானந்தம் கொண்டான் ,
மணி எட்டு ஆகியது இன்னும் அந்த பேருந்து வரவில்லை , மணி எட்டு முற்ப்பது ஆனது இன்னும் பேருந்து வரவில்லை ,
அப்போது தான் சுரேஷ் அருகில் நின்றிருந்த ஒருவரிடம் ஐயா இன்று இத்தனை தாமதமாகியும் ஏன் எந்த பேருந்தும் வரவில்லை என்று கேட்க ,அதற்கு அவர்
தம்பி உனக்கு தெரியாதா விலை உயர்வை கண்டித்து இன்றிலிருந்து பந்த் எந்த பேருந்தும் ஓடாது என்று கூற
இது தெரியாமல் ,இன்று பேருந்தை பிடித்தே தீருவேன் என்று பாட்டி மீது சத்தியம் செய்து விட்டேனே
அப்படியென்றால் பாட்டி அவ்வளவுதானா என்று கல்லூரியை நோக்கி ஓட ஆர்பித்தான் சுரேஷ்
-விக்னேஷ்