தீவிரவாதி
தீவிரவாதி
************
அந்த ஒரு நாள்
அவன் ஒரு தீவிரவாதி...
வருடத்தில் மீதி நாள்
வசிக்கும் இடம் தெரியாது...
அதற்காக
அவனது வாழ்க்கை
தலைமறைவானதுமில்லை...!
அந்த ஒருநாள்
அது அவனுக்கு எப்படித் தெரியும்...?
உள்ளூரில் பிறந்து
வெளியூரில் வசிப்பவர்க்கே
யாரோ ஒருவர் சொல்லித்தான் தெரியும்
ஆனா இவனுக்கு
யார் சொல்லுவார்...?
ஆனாலும் தெரிந்து விடுகிறது...
பொதுவா அவன் செல்லும்
ஊர்களில்
சொந்தம்னு சொல்லிக்க
அவனுக்கு யாருமில்லை...!
தகவல் சொல்ல ஆளும் வைப்பதில்லை...!!
அவனிடம் எப்பவும்
பலவகை துப்பாக்கிகள் இருக்கும்
எந்த நேரமும் வெடிக்க
வெடி பொருட்கள் இருக்கும்...
அவனது குறிக்கோள்
குழந்தைங்க மட்டும் தான்...
அவர்களை பாத்தா சும்மா
விடமாட்டான்...
பின்னாடியே போவான்..
ஆசை காட்டுவான்...
அவன் கிட்ட
அப்படி என்ன வசிய மருந்திருக்கும்...?
இந்த ஆபத்தில்லா ஆபத்தான
மனிதனை
ஊராரும் கண்டுகொள்வதில்லை...
பாவம் பொழச்சி போகட்டும்னு
விட்டுடுவாங்க...
பாவம்...
அவன் வச்சிருக்கும் துப்பாக்கியும்
எந்த நேரமும் வெடிச்சிடும் பலூனும்
குழந்தைங்ககிட்டதான விற்க முடியும்...
அதுவும் இந்த திருவிழா காலங்களில்...
இவண்
க.முரளி