மனம் வருடும் மயிலிறகு - 1

தனிமை பொழுதில்
மென்று துப்பும்
மௌனங்களுள்....
கனவுகள் கண்ணோடு
கதை பேச....
கவிதைகள் தமிழோடு
மொழி பேச...
நினைவுகள் உம்மோடு
நடைபோட...
உம் மனம் வருட
வருகிறேன்...
மயிலிறகாய்....!!
கருவாகி ...
உருவாகி...
உயிராகி வந்தேன்...
பிரம்மனின் கனவுகளுக்கு....
உயிர்கொடுக்க...!
(மீண்டும் வருடும்)