என்னை எனக்கே யார் என்று அறிமுகம் செய்தவர்கள் என் ஆசிரியர்கள்

அம்மாவின் அடுத்த உருவம்
அப்பாவின் அடுத்த உருவம்
நண்பனின் அடுத்த
உருவம்
தோழியின் அடுத்த
உருவம்
ஆசிரியர்

எனக்கென்ன தெரியும்
என்பதை
உனக்கென்ன உன்னால்
முடியும்
என்பார்

ஆயிரம் புத்தகங்கள்
ஒரு ஆசிரியருக்கு சமம்
ஆமாம்
ஆயிரம் புத்தகங்கள்
தரவில்லை
அனுபவ பாடத்தை உங்கள் அளவிற்கு

இன்று ஆசிரியர்களுக்கு
வேலையே இல்லையாம்
கணினி ஒன்றே போதுமாம்
ஆயிரம் ஆசிரியர்கள்
சொல்லித்தருவதை தாண்டியும்
வேலை செய்யுமாம்

நகல்(Copy) எடுத்து
ஒட்டிக்(Paste) கொண்டு படிப்பதில் இழக்கிறேன்

ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது
இடை இடையே
கதைக்கும் நகைச்சுவையையும்
பாடத்தோடு கூடிய கதையையும்
நடைமுறை வாழ்க்கையை
நாங்கள் உணர
அவர் சொல்லும்
அவர் வாழ்க்கை நிகழ்வுகளையும்
அனுபவங்களையும்
நடு நடுவே வரும் தூக்கங்களையும்
வகுப்பறை சிரிப்பொலியையும்
நண்பர்களின் அரட்டைகளையும்
ஆசிரியரின் பிரம்பையும்
அந்த பிரம்பு எங்கள் வாழ்க்கையை மாற்றும்
மந்திர கோல்
(நாங்கள் அடிவாங்க நாங்களே குச்சியை கொண்டு வந்து வைப்போம்.

ஆனால் ஆசிரியரோ நாங்கள் தப்பு செய்தால் மட்டுமே அடிப்பார்
தவறு செய்தால் தனியாக அழைத்து
இதை இப்படி செய்யக்கூடாது
இப்படி செய்யவேண்டும் என்பார்)

பாராட்டும் பொழுது வாய்விட்டு ஊரறிய பாராட்டுவார்

எங்களின் வெற்றியில் சந்தோஷம் காண்பவர்
தோல்வியில் கூட நின்று
ஆறுதல் உரைத்து அடுத்த கட்டத்திற்கு
முன்னேற உறுதுணையாய் நிற்பார்

யாருடனும் நீ வீணாக எதிர்த்து நிற்காதே
உன் பயத்தை எதிர்த்து நில் என்பார்
தப்பு என்றால் தட்டிக்கேட்க தயங்காதே என்பார்

கரும்பலகையில்
உலகை
வெள்ளை அடிப்பவர்
ஆசிரியர்

வானம் நீலமாய் நிற்கும் பொழுது ஜொலிப்பதில்லை
கருத்து நிற்கும் பொழுது தான் வைர மழை பொழிகிறது
அதுபோல் என்ன தான்
அறிவாளியாய் மாணவன் இருந்தாலும்
ஒழுக்கம் எனும் ஒளியை நம்முள் ஏற்றி
நமை மிளிரவைப்பவர்
ஆசிரியரே


தீட்டாத வைரத்தை
தீட்டி
சிதறாமல் முத்தை சேமித்து
தங்கத்தை வார்த்து
உலகுக்கு அறிமுகம்
செய்பவர்
அடையாளம் இல்லாமல்

சம்பளத்திற்காக வேலை செய்கிறார்
என்று கூறினால்
அது முட்டாளின் வேதமாகும்
அவர் வெறும் பாடத்தை மட்டும் போதிக்கலாமே
ஆனால் அவர் வாழ்க்கையையே அல்லவா
போதிக்கிறார்

பூக்கள் நாளும்
வந்து போகும்
ஆசிரியர்
அந்த பூக்களின்
வேர்
தினமும் தேடி தேடி
படித்து அறிவை வளர்த்தி
நம் ஐயத்தை போக்கி
நமை செழுமையாக்குகிறார்

வாழைமட்டை
கரித்துண்டு
கற்பூரம்
வேறு வேறு பார்வை
இல்லை
என் ஆசிரியருக்கு
வாழைமட்டை ஜோதியாகும்

இளைபார நிழலாவார்
அவருக்கு நிழல் யார் தருவார்
அழுவும் குழந்தையை தாய் அறிவார்
மனதில் குழப்பம் உள்ள
மாணவனை ஆசிரியர் அறிவார்
ஆறுதல் மொழி பேசுவார்

குடும்ப சுமை தூக்கும்
மாணவன்
உடலாலும்
மனதாலும்
பள்ளியில் படித்து
முன்னேற
வழிவகுப்பார்

என் மாணவன் என்று சொல்லிக்கொள்ள பெருமை படும்
இன்னொரு தந்தையன்றோ

வெற்றியில் பரிசு
நாங்கள் பெற
வெற்றிக்கு வித்திட்டவர்
ஓரம் நின்று கை தட்டி உற்சாகம் தந்திடுவார்


ஆயுத எழுத்தில்
உலகின் மிக பெரிய
ஆயுதத்தை அறிமுகம்
செய்தவர் ஆசிரியர்

வாடாத முகத்தை
வைத்து சொந்த வாழ்க்கை வலியை
மறைத்து
ஆரோக்கிய பாடம் எடுப்பவர்


கணிதத்தில் சூத்திரத்தோடு விடை தருவார்
கணக்கில்லா அன்பிலே
சூத்திரம் ஏது
சாத்திரம் ஏது
உயிர்களை நேசி என்பார்

தமிழில்
வாழும் உலகம்
அதில் இல்லாததேது
ஆசிரியரின் கற்றலில் உணர்ந்தேன்
தமிழ் கற்றது அன்பு
தமிழ் கற்றது அறிவு
தமிழ் கற்றது வீரம்
தமிழ் கற்றது வாழ்க்கை
தமிழ் கற்றது பாசம்
தமிழ் கற்றது பக்தி
தமிழ் கற்றது நட்பு
தமிழ் கற்றது காதல்
தமிழ் கற்றது தன்னம்பிக்கை
தமிழ் கற்றது விடாமுயற்சி
தமிழ் கற்றது உண்மை
தமிழ் கற்றது ஊக்கம்
தமிழ் கற்றது உழைப்பு
தமிழ் கற்றது உயர்ந்த எண்ணம்
தமிழ் கற்றது இரக்கம்
தமிழ் கற்றது கருணை
தமிழ் கற்றது தொண்டு
தமிழ் கற்றது ஏற்றம்
தமிழ் கற்றது பரிவு
தமிழ் கற்றது உதவி
தமிழ் கற்றது ரௌத்திரம்
தமிழ் கற்றது உள்ளம்
தமிழ் கற்றது தாகம்
தமிழ் கற்றது தேடல்
தமிழ் கற்றது வாசம்
தமிழ் கற்றது தென்றல்
தமிழ் கற்றது இசை
தமிழ் கற்றது விவேகம்
தமிழ் கற்றது வேகம்
தமிழ் கற்றது சப்தம்
தமிழ் கற்றது மௌனம்
தமிழ் கற்றது நீதி
தமிழ் கற்றது புதுமை
தமிழ் கற்றது பழமை
தமிழ் கற்றது வேதம்
தமிழ் கற்றது நாதம்
தமிழ் கற்றது நாடகம்
தமிழ் கற்றது இயல்
தமிழ் கற்றது பாடல்
தமிழ் கற்றது மோகம்
தமிழ் கற்றது ஐ
தமிழ் கற்றது மயக்கம்
தமிழ் கற்றது தளம்
தமிழ் கற்றது இலக்கணம்
தமிழ் கற்றது இலக்கியம்
தமிழ் கற்றது வரலாறு
தமிழ் கற்றது மருத்துவம்
தமிழ் கற்றது கணிதம்
தமிழ் கற்றது அறிவியல்
தமிழ் கற்றது ஓசை
தமிழ் கற்றது நயம்
தமிழ் கற்றது ஞாபகம்
தமிழ் கற்றது சந்தம்
தமிழ் கற்றது நினைவு
தமிழ் கற்றது பாக்கள்
தமிழ் கற்றது .....யாவும்

காற்று போல் எங்கும் எதிலும் தமிழ்
என் ஆசிரியர்கள்அனைவருக்கும் சமர்பிக்கிறேன் இவ்வரிகளை


உன்னால் தான் சாத்தியமாகும்
மலையை உடைக்க
பனியை மலையாக்க
மின்னலை மின்சாரமாக்க
இடியை இசையாக்க
வானை நிலமாக்க


~ பிரபாவதி வீரமுத்து

~~~~~~~~~~~~~~~

எனது ஒவ்வொரு செயலிலும் நின்று
என்னை நல்வழிப்படுத்திய, எனது
எல்லா ஆசிரியர்களுக்கும் நான்
நன்றிகடன்பட்டிருக்கிறேன்

என்னை எனக்கே
யார் என்று
அறிமுகம் செய்தது
எனது ஆசிரியர்கள்
(நான் எனது டைரியில் என் ஆசிரியர்களுக்காக எழுதிய வரிகள்)

~ பிரபாவதி வீரமுத்து

~~~~~~~~~~~~~~

ஆயிரம் வார்த்தையினால்
என்னை செதுக்கினீர்
ஆனால் ஒரு வார்த்தையும்
என்னை சிதைக்கவில்லை!
(இக்கவிதை என் தாய் தந்தையை நினைத்து எழுதியது .ஏற்கனவே தளத்திலும் சமர்பித்திருக்கிறேன்.
இத்தலைப்பிற்கு இவ்வரிகள் பொருத்தமாக இருக்குெமன்று நினைத்து மீண்டும் பதிக்கிறேன்)

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-May-16, 6:30 pm)
பார்வை : 15817

மேலே