பசியும் ருசியும்
பசித்தவனுக்கு ஒரு பருக்கை கூட
பஞ்சாமிர்தம் தான்
பசி பிணியரியாதவனுக்கு
பாத்திரம் நிறைந்திருந்தாலும் கொஞ்சம்தான்
எப்போதும் நாடுவது இருப்பதையும் மிஞ்சிதான்
அளவான உணவும் அவனுக்கு பஞ்சம்தான்
எழைக்கு போதும் ஒரு வேளை நீராகாரம்
கொண்டவனுக்கு வேண்டும் பலகாரம் பல ரகம்
உழைப்பவன் உறங்குவது பசி மறந்து
சீமான் தவிப்பது திருடனை நினைத்து
உனக்கு மிஞ்சிய உணவு
பசித்தவனுக்கு கொடுத்துதவு
பிறக்கட்டும் இனி பசியில்லா புது உலகு
பகிர்ந்து உண்பதுவே அழகு