தாமரை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தாமரை
இடம்:  மலேசியா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-May-2015
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  38

என்னைப் பற்றி...

தமிழ் பேச்சு என் மூச்சு!!! சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவள். கவிதை மீது கொஞ்சம் மோகம் உண்டு...அதைப் படைத்திட ஆர்வமும் உண்டு.

என் படைப்புகள்
தாமரை செய்திகள்
தாமரை - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2020 3:23 pm

வேளியோட்டம் தடைப்பட்ட போதும்
மனிதா உன் மாய செயல்லோட்டம் நிற்கவில்லையே
மண்ணில் விதைத்திட முடியா நிலையிலும்
சமுக ஊடகத்தில் உழுதிட துணிந்தாயே
உண்மையும் பொய்மையும் அள்ளித் தெளித்தாயே

மனிதம் மறந்துப் போனால் மண்ணில்
புனிதம் இல்லை
இதயம் விட்டு வேரிடத்தில் எங்கும்
இறைவன் இல்லை
நாகரிக மானிடனின்
நஞ்சுக் கொண்ட மனதால்
உதிர்ந்தன சில உயிர்கள்
உருக்குலைந்தது மானிட நியதிகள்

மேலும்

தாமரை - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2019 8:41 am

நாளைகள் மீது நம்பிக்கை
இன்றும் நீ வராததால்
கொள்கிறேன்
என் வானில் ஆயிரம் மேகங்கள் கடந்தாலும்
நான் காத்திருப்பது நீ எனும் நிலவுக்காக தான்
காலம் கடந்து போகிறது கவலையில்லை
காத்திருக்கிறேன் காதல் என்னையும் கடந்து போகட்டும்

மேலும்

தாமரை - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2018 9:53 am

கயல் போனற கண் இல்லை
புயல் வீசும் பார்வை உண்டு
கண்டவர் மயங்கும் அழகில்லை

மேலும்

இயற்கையாய் அணைத்திடும் அமைந்திட செயற்கைக்கு வேலையில்லை என்ற பொருளுடன் தங்கள் கவி கவர்கிறது . புயல் வீசும் என்பதற்கு பதிலாக மையல் வீசும் என்றிருக்க கவி சிறப்பாமோ ? 16-Jul-2018 8:17 pm
தாமரை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2018 8:20 am

வெண்பனி நிலவே என் வாசல் வந்து
புது கோலம் போடு
வண்ணங்களில் இல்லாமலும் பரவாயில்லை
உன் வருகையை மட்டும் சொல்லட்டும்

குளிர் தென்றலே என் சுவாசம்
சேர்ந்து வாசம் வீசு
புயலாக என்னை சாய்தாலும் பரவாயில்லை
நேசம் மட்டும் நிலைத்தால் போதும்

காதல் கடலே என் மீது
அலையாய் உரசிடு
உன்னுள்ளே கலந்து கரைந்தாலும் பரவாயில்லை
நொடிக்கூட விலகாமல் இருந்தால் போதும்

மேலும்

அன்புக்குள் மூழ்கிக் கிடக்கிறது காயப்பட்ட உள்ளங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:40 am
உன்னுள்ளே கலந்து கரைந்தாலும் பறவாயில்லை நாெடி கூட விலகாமல் இருந்தாலே பாேதும் அருமையான வரிகள் 30-Mar-2018 9:23 am
அழகிய காதல் கவிதை அலங்கார சொற்கள் பிரயோகம் அத்தனையும் படித்து ரசித்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி 30-Mar-2018 8:38 am
அவளை மட்டும் யாசிக்கும் மனம் விளைவுகள் பற்றிய கவலை இல்லை வரவு இருந்தால் போதும்.... அருமை... வாழ்த்துகள் 30-Mar-2018 8:25 am
தாமரை - தாமரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2017 9:48 pm

நதியில் மீன்கள் நீந்துவதுண்டு
நீல வானில் நீந்தக் கண்டேன்
நீர்த் தெளித்த வாசலில் கோலம் கண்டதுண்டு
வளர்த்து குறுகும் ஒற்றைப் புள்ளி கோலம் வானில் கண்டேன்
வர்ணங்கள் ஏழில் வானவில் வருவதுண்டு
பால் வண்ணத்தில் வட்டமாய் பௌர்ணமி நாளில் கண்டேன்
காலை மாலை கலையாமல் என்னை தொடரும் நிழலுண்டு
கருப்பு இரவில் வெள்ளை நிழலாய் நிலவைக் கண்டேன்!!!

மேலும்

நன்றி. :) 07-Nov-2017 10:17 am
வெள்ளை நிழலென்று நிலவைச் சொல்கின்ற வித்தகம் பிடித்திருக்கிறது . வாழ்த்துகள் . 10-Sep-2017 5:23 am
தாமரை அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2016 8:50 am

காதல் யுத்தமில்லை
அதில் கத்தியில்லை ரத்தமில்லை
வெற்றி தோல்வி இல்லை
வீரன் கோழை போட்டியில்லை

வன்முறையால் வாங்கிக் கொள்ள
காதல் பதவியில்லை பட்டமில்லை
குவித்து வைத்த பொன் புதையலில்லை
வளைந்து கொடுக்கும் வேலையாளுமில்லை

விலை கொடுத்து வாங்க
காதல் கடைகளில் கிடைப்பதில்லை
கடனாக யாரும் கொடுப்பதில்லை
தொலைந்துப் போக பொருளுமில்லை

வழிப்போக்கன் பருகி செல்ல
காதல் வளைந்தோடும் நதியில்லை
கோடையில் அது வற்றிப்போவதுமில்லை
காடு மலை தாண்டுவதுமில்லை

எட்டிப் பறித்து சுவைக்க
காதல் மரத்தில் காய்ப்பதில்லை
காற்றடித்தால் வேரோடு சாய்வதுமில்லை
வேலிக்குள் சிறைப்படவுமில்லை

காதல் குழந்தை மாதிரி
சிரித்

மேலும்

நன்றி.... 27-Sep-2016 9:52 am
நன்றி.... 27-Sep-2016 9:51 am
காதல் பூ போல செடியில் அழகாய் சிரிக்கும் மணத்தால் மயக்கும் பறித்தால் வாடிப் போகும்............. அருமையான வரிகள் 20-Aug-2016 12:26 am
உண்மைதான்..காதல் என்பது தெய்வீகம் நிறைந்தது 12-Jul-2016 4:59 pm
தாமரை - தாமரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 8:40 am

நடமாடும் குட்டித் தீவே
என்னை சுடும் அழகிய தீயே
காலை மாலை பூத்திடும் பூக்கள்
உன்னை கண்டு மயங்கிடுதே
அங்கே இங்கே அலையும் தென்றலும்
உன்னை காண ஏங்கிடுதே

வானில் உதித்த வானவில் பெண்ணே
பூமியில் பிறந்த தேவதை மகளே
மௌனத்திலே என் மனதை துளைத்தவளே
மின்னல்கள் ரெண்டு கண்களில் கொண்டு
இதயம் சிதைத்து காதல் விதைக்கும் ஆயுதமே
உன்னால் இன்ப வலிகள் ஆயிரமே

நீ சாலையோரம் நடந்து சென்றால்
சட்டென சாய்ந்து பார்க்கும் மரங்கள்
உன் பாதம் தொடும் பூமியை கண்டு
கோபத்தோடு கதர்கள் வீசுது சூரியனும்
வெயிலில் நீ நடப்பதைக் கண்ட மேகமும்
இங்கு மேக குடைகள் நீட்டிடுதே

உன்னை தொட்டு வரும் தென்றலும் கூட
கவிதை

மேலும்

நன்றி தோழரே. 21-Jun-2016 8:11 am
நன்றி தோழரே. 21-Jun-2016 8:11 am
நன்றி தோழரே. 21-Jun-2016 8:10 am
அழகான வரிகள்! வாழ்த்துக்கள்! 20-Jun-2016 9:52 pm
தாமரை - தாமரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2016 8:40 am

நடமாடும் குட்டித் தீவே
என்னை சுடும் அழகிய தீயே
காலை மாலை பூத்திடும் பூக்கள்
உன்னை கண்டு மயங்கிடுதே
அங்கே இங்கே அலையும் தென்றலும்
உன்னை காண ஏங்கிடுதே

வானில் உதித்த வானவில் பெண்ணே
பூமியில் பிறந்த தேவதை மகளே
மௌனத்திலே என் மனதை துளைத்தவளே
மின்னல்கள் ரெண்டு கண்களில் கொண்டு
இதயம் சிதைத்து காதல் விதைக்கும் ஆயுதமே
உன்னால் இன்ப வலிகள் ஆயிரமே

நீ சாலையோரம் நடந்து சென்றால்
சட்டென சாய்ந்து பார்க்கும் மரங்கள்
உன் பாதம் தொடும் பூமியை கண்டு
கோபத்தோடு கதர்கள் வீசுது சூரியனும்
வெயிலில் நீ நடப்பதைக் கண்ட மேகமும்
இங்கு மேக குடைகள் நீட்டிடுதே

உன்னை தொட்டு வரும் தென்றலும் கூட
கவிதை

மேலும்

நன்றி தோழரே. 21-Jun-2016 8:11 am
நன்றி தோழரே. 21-Jun-2016 8:11 am
நன்றி தோழரே. 21-Jun-2016 8:10 am
அழகான வரிகள்! வாழ்த்துக்கள்! 20-Jun-2016 9:52 pm
தாமரை - தாமரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2016 8:57 pm

கதிர்களால் கை நீட்டி
அணைக்கிறாய் தினம் ஒளியூட்டி
அன்னை மடியின் கதகதப்பு
தந்திடும் உன் அரவணிப்பு
நீ அணையா தீபம் வானோடு
உணர்கிறேன் உந்தன் அனலோடு
ஒளி மங்கா விண்விளக்கு
மின் வெட்டு நாளிலும் மிளிரும் உன்னழகு

மேலும்

நன்றி நண்பா. 30-May-2016 8:54 pm
பிரகாசமான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 9:30 am
தாமரை - தாமரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2016 9:28 am

பயணம்

பேருந்து ஒன்றுதான்
ஆனால் ஒவ்வொரு ஜன்னல் கூறும்
கதை வேறுதான்

கடல்

கால்களை வருடி செல்லும் போது
உணர்கிறேன் நீயும் தாயென்று

காதலி
பூந்தென்றல் மட்டும் வாசம் வீசாது
உனது சுவாசமும் கூட

கண்டனம்

காலையில் தொடங்கி
தலைவன் கண்ணசைவில்
காணாமல் போகும்
தொண்டனின் கொள்கை


கவலை

நினைவில் உள்ளவரைதான்
துரத்தும் கவலை
அதை தொலைத்து விட்டால்
தொடராது தொல்லை
காலம் உனக்கு தரும் நல்மருந்தை
கலங்குவதில் ஏது பயனே?


கவிதை

என் கவிதையும் புலிதான்
நம்பவில்லை என்றால்
கூர்ந்துப் பார்
வரிகள் தெரியும்

மேலும்

படைப்பிற்கு உயிரூட்டும் கருத்துகளுக்கு நன்றி தோழரே... 28-May-2016 7:54 pm
நிஜமாய் வரிகள் கண்டேன் கவிபுலியாய் வாழ்த்துக்கள் ரசிக்க வாய்பளித்தமைக்கு 28-May-2016 12:49 am
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழா... 25-May-2016 7:12 pm
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது உண்மை தான் வாழ்த்துக்கள் ... 25-May-2016 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே