காதல் காதலாய்
காதல் யுத்தமில்லை
அதில் கத்தியில்லை ரத்தமில்லை
வெற்றி தோல்வி இல்லை
வீரன் கோழை போட்டியில்லை
வன்முறையால் வாங்கிக் கொள்ள
காதல் பதவியில்லை பட்டமில்லை
குவித்து வைத்த பொன் புதையலில்லை
வளைந்து கொடுக்கும் வேலையாளுமில்லை
விலை கொடுத்து வாங்க
காதல் கடைகளில் கிடைப்பதில்லை
கடனாக யாரும் கொடுப்பதில்லை
தொலைந்துப் போக பொருளுமில்லை
வழிப்போக்கன் பருகி செல்ல
காதல் வளைந்தோடும் நதியில்லை
கோடையில் அது வற்றிப்போவதுமில்லை
காடு மலை தாண்டுவதுமில்லை
எட்டிப் பறித்து சுவைக்க
காதல் மரத்தில் காய்ப்பதில்லை
காற்றடித்தால் வேரோடு சாய்வதுமில்லை
வேலிக்குள் சிறைப்படவுமில்லை
காதல் குழந்தை மாதிரி
சிரித்தால் சிரிக்கும்
சினத்தால் சிணுங்கும்
சின்ன புயல் அது
காதல் பூ போல
செடியில் அழகாய் சிரிக்கும்
மணத்தால் மயக்கும்
பறித்தால் வாடிப் போகும்
காதல் கோவில் சிலை போல
வணங்குபவர்க்கு கடவுள்
தூற்றுவோருக்கு கல்
பாகுபாடு பார்க்காத தராசு
கடவுள் என்றால் அருள்
கல் என்றால் காயம்
அருள் கிடப்பதும் அடி கிடப்பதும்
அவரவர் ஆன்மாவில்தன் உள்ளது