முதல் பார்வை
நடமாடும் குட்டித் தீவே
என்னை சுடும் அழகிய தீயே
காலை மாலை பூத்திடும் பூக்கள்
உன்னை கண்டு மயங்கிடுதே
அங்கே இங்கே அலையும் தென்றலும்
உன்னை காண ஏங்கிடுதே
வானில் உதித்த வானவில் பெண்ணே
பூமியில் பிறந்த தேவதை மகளே
மௌனத்திலே என் மனதை துளைத்தவளே
மின்னல்கள் ரெண்டு கண்களில் கொண்டு
இதயம் சிதைத்து காதல் விதைக்கும் ஆயுதமே
உன்னால் இன்ப வலிகள் ஆயிரமே
நீ சாலையோரம் நடந்து சென்றால்
சட்டென சாய்ந்து பார்க்கும் மரங்கள்
உன் பாதம் தொடும் பூமியை கண்டு
கோபத்தோடு கதர்கள் வீசுது சூரியனும்
வெயிலில் நீ நடப்பதைக் கண்ட மேகமும்
இங்கு மேக குடைகள் நீட்டிடுதே
உன்னை தொட்டு வரும் தென்றலும் கூட
கவிதைகள் கோடி பாடிடுதே
அழகின் அழகே உன்னை கண்ட நொடியில்
எந்தன் நிழலும் உன் பின்னே சென்றிடுதே
தோட்டா துளைக்கா இதயம் எனது
உன் பார்வையாலே பழுதானது
பறக்கும் பறவைகள் நூறு
படபடக்கும் உன் இமையோடு
பார்வையால் படையெடுக்கும் அரசியே
போர் தொடுக்கும் முன்னே சரிந்தது என் சேனையே
பிறந்தது புது காதல் ஆணை
பணிந்தது என் ஆண்மை
பரவசமாக்கும் உன் பார்வைகள் போதும்
பழகிடலாம் காதல் மொழிகளில்
காலம் கடந்து வாழ்ந்திட
கைகள் கோர்த்து நடந்திட
வருவாயா வாழ்க்கை துணையாக
தருவேன் என்னையே அதற்கு பிணையாக