குட்டி வரிகள் கொஞ்சம் சுட்டியாய்

பயணம்
பேருந்து ஒன்றுதான்
ஆனால் ஒவ்வொரு ஜன்னல் கூறும்
கதை வேறுதான்
கடல்
கால்களை வருடி செல்லும் போது
உணர்கிறேன் நீயும் தாயென்று
காதலி
பூந்தென்றல் மட்டும் வாசம் வீசாது
உனது சுவாசமும் கூட
கண்டனம்
காலையில் தொடங்கி
தலைவன் கண்ணசைவில்
காணாமல் போகும்
தொண்டனின் கொள்கை
கவலை
நினைவில் உள்ளவரைதான்
துரத்தும் கவலை
அதை தொலைத்து விட்டால்
தொடராது தொல்லை
காலம் உனக்கு தரும் நல்மருந்தை
கலங்குவதில் ஏது பயனே?
கவிதை
என் கவிதையும் புலிதான்
நம்பவில்லை என்றால்
கூர்ந்துப் பார்
வரிகள் தெரியும்