நிலா
நதியில் மீன்கள் நீந்துவதுண்டு
நீல வானில் நீந்தக் கண்டேன்
நீர்த் தெளித்த வாசலில் கோலம் கண்டதுண்டு
வளர்த்து குறுகும் ஒற்றைப் புள்ளி கோலம் வானில் கண்டேன்
வர்ணங்கள் ஏழில் வானவில் வருவதுண்டு
பால் வண்ணத்தில் வட்டமாய் பௌர்ணமி நாளில் கண்டேன்
காலை மாலை கலையாமல் என்னை தொடரும் நிழலுண்டு
கருப்பு இரவில் வெள்ளை நிழலாய் நிலவைக் கண்டேன்!!!