சூரியன்

கதிர்களால் கை நீட்டி
அணைக்கிறாய் தினம் ஒளியூட்டி
அன்னை மடியின் கதகதப்பு
தந்திடும் உன் அரவணிப்பு
நீ அணையா தீபம் வானோடு
உணர்கிறேன் உந்தன் அனலோடு
ஒளி மங்கா விண்விளக்கு
மின் வெட்டு நாளிலும் மிளிரும் உன்னழகு

எழுதியவர் : தாமரை (29-May-16, 8:57 pm)
Tanglish : sooriyan
பார்வை : 323

மேலே