காதலும் மோதலுமாய்

நட்போடு எனக்கு காதலும் உண்டு
உன் மீது....
என்னை விட்டு நீ
விலகிட எண்ணினாலும்
விடாமல் துரத்துவேன்....
என் அலை கரங்களால்
உன்னை அணைத்திடுவேன்...!
என் அலையே....
காதலியே....
நீ என்னுள் கலக்கும் வரை
ஓய்வில்லையடி எனக்கு...
என்னிடம் அகப்படாமல்
நீயும் தப்பமுடியாது..!
ஏனென்றால்
நாம் இருவரும் ஒன்றாக
இணைவதற்கே
படைக்கப் பட்டவர்களாயிற்றே....!
நம்மிடையே நடக்கும்
காதலும் மோதலும்
சூரியனின் தகிப்பிலும்
சந்திரனின் குளுமையிலும்
ஆனந்தமாய்
நாள் முழுவதும் நீள்கிறது....!
அல்ல.... அல்ல...
ஜென்ம ஜென்மமாக நீடிக்கிறது....!
நம் காதலுக்கு சாட்சியாய்
அந்த வானமும் நம்மை ரசிக்கின்றது..!
நம் காதல் விளையாட்டை
ஆயிரம் கண்கள் ரசித்தாலும்
காதலர்களுக்கு மட்டுமே தெரியும்
நம் மோன விளையாடல்....!
அலை கடலின் அதிர்வலைகளாய்
நம் காதல் விளையாடல்...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (29-May-16, 7:01 pm)
பார்வை : 99

மேலே