நீயாக
கயல் போனற கண் இல்லை
புயல் வீசும் பார்வை உண்டு
கண்டவர் மயங்கும் அழகில்லை
கண்ணியம் கொண்ட கற்புண்டு
கவரும் வகையில் பேச்சில்லை
கனிவாய் பழகும் குணமுண்டு
செயற்கை அழகேற்ற பொன் நகையில்லை
இயற்கை மகுடமாய் புன்னகையுண்டு
இல்லை என இவ்வளவு இருந்தும்
இருக்கிறாய் நீ நீயாக
இயக்குகிறாய் என்னை இயல்பாக
ஏங்குகிறேன் உன்க்கு மட்டும் துணையாக!!!