பட்டு வண்ண அழகு

பிறப்பே தன்னம்பிக்கையில்
........தடைகளை தகர்த்து வெளிவரும்
சிறகுகள் இரண்டு
வண்ணங்கள் ஆயிரம்

வண்ணச் சிறகடித்து
வானவெளியில் விந்தை செய்யும் அழகை
வர்ணிக்க வார்த்தை இல்லை

அழகு பூக்களில்
ஆனந்தமாய் பசியாறும்

கவிஞன் கற்பனையில்
கவியுலகம் சுற்றும்

காதலர் மனங்களில்
.......காதல் சிறகடிக்கும்

உள்ள வெளியில்
......உல்லாச உருவெடுக்கும்

பிறன் கை நோக்கா
......தன் முயற்சியில் வெற்றியை பறிக்கும் -இது
பட்டு வண்ண அழகு
பட்டறிவின் சிறகு.



-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (16-Jul-18, 9:49 am)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : pattu vanna alagu
பார்வை : 192

மேலே