அவள் விழிகள்
இடைவிடாமல் படபடக்கும் இமைகள்
ஒன்றுசேர சம்மதம் கேட்டது...
நவரசம் பொழியும் கருவிழிகள் ஆயிரம் கேள்விகளை அள்ளி வீசியது...
விழியசைவுக்கு ஏற்றபடி வளைந்து நெளியும் புருவங்கள் முழுமையாய் முற்றுகை போட்டது....
அந்த இரு கண்களால் கைதுசெய்யப்பட்டு வாழ்நாள் கைதியாகிப்போனேன்...