அவளிடம் பேசுகையில்

நீண்ட காத்திருப்பேன் பலனாக சந்திக்கும் வாய்ப்பு...

காலம் கனிந்த நிமிடங்கள் அவளருகில் நான்...

அவள் கண்களை பார்க்க முயற்சித்து தோல்விதான் மிச்சம்...

பேசலாமென எண்ணுகையில் வார்த்தை வர மறுக்கிறது...

ஒருவழியாக பேச ஆரம்பித்தேன் மழலை மொழியைவிட தடுமாற்றத்தோடு...

அவள் எவ்வித சலனத்தையும் வெளிக்காட்டாமல் என் பெயர் சொன்ன நிமிடத்தில் என்னை மறந்தேன்....

பதில் சொல்ல ஆரம்பித்ததும் சில மணிநேரங்கள் சென்றதை தாமதமாக உணர்ந்தேன்...

எழுதியவர் : ஜான் (16-Jul-18, 10:19 am)
Tanglish : avalidam pesugayil
பார்வை : 416

மேலே