என்னோடு பிறவா தமையனே

ஆண் மகன் யாரோடும் பழகாதவள் நான்
அப்பா தம்பியை தவிர வேறு யாரையும் பார்க்காதவள்
அண்ணனாக ஒருவன் இருந்தால் நன்றாக இருந்கும் என்று நினைக்கும் பொது
எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ
ஏனோ என்னக்கு கிடைத்ததால் தான்
நீ என்னோடு இல்லாமலே போய்விட்டயோ
நீண்ட காலம்கூட என்னோடு பழகாமல்
உடனே அன்பு உறவு என்ற பெயரில் என்னை ஏற்றுக்கொண்டாய்
முகம் பார்கவில்லை முகவரி கேட்கவில்லை
கடவுளின் வில்லையட்டல் நான் உன்னை பற்றி
அறிய முடிந்த என்னால்
ஏனோ உன்னோடு பயணிக்க முடியவில்லை
என் தங்கை என்று அன்போடு அழைத்தாய்
கடவுளுக்கே அந்த அன்பு தேவை பட்டதால் தான் உன்னை நீண்ட கால உயிர்தேரிக்கவில்லையோ
என் உடன் பிறவா சகோதர