புகைக்கின்ற வாய்க்கிடு பூட்டு
தெம்மாங்குக் கண்ணிகள்
உதட்டில் வைத்தே உரிஞ்சுகி றாய்ப்புகை
...உயிரை உரியும் அறிவாயா ?
இதமே யிதுவென் றியம்புகி றாய்ப்புகை
...இதயம் பொசுக்கும் அறிவாயா ?
நீயும் மாய்வா யுன்னைச் சுற்றி
...நிகழும் அனைத்தும் மாண்டுவிடும்
தீயும் பரவி திக்கை நிரப்பத்
...தீதே உலகை ஆண்டுவிடும் !
நஞ்சின் குவியல் தன்னை உனக்கு
...நயமாய்த் தந்தால் ஏற்பாயா ?
வஞ்சப் புகையும் நஞ்சின் வார்ப்பே !
...வன்மை யின்றித் தோற்பாயா ?
புகைக்கும் பழக்கம் தன்னை விட்டுப்
...புன்னியம் தன்னை நாட்டிவிடு
புகைத்துக் கிடக்கும் வாயைக் கண்டால்
...பூட்டை அங்கே போட்டுவிடு !
-விவேக்பாரதி

