30-5-16-தினம் ஒரு காதல் தாலாட்டு பாடல் - தனிமை - 57 =120
“யாரு வந்து தூது சொல்வது ?
என் நிலவே..!
யாரு வந்து தூது சொல்வது..?
நீ விடும் தூது –
நலமென்னும் போது
யாரு வந்து தூது சொல்வது..?
எனக்கு..
யாரு வந்து தூது சொல்வது..?”
கண் அயரும் நேரம்
கனவில் நீ தோன்றி
என்னருகே வந்தால்
மன்மத கிறுகம் மன்றாடுதே ராணி..!
சேவக்கோழி கூவி
கனவை கலைக்குதே பாவி
நீ என்னைவிட்டு நீங்கி
எங்கோ போகிறாய் தேவி…!
கண்ணன் மனம் ஏங்கிட
கன்னி மனம் தாங்கிட
இருமனம் சேர்ந்தாலே..
திருமண வைபோகம்தான்
ஆற்றிலே படகைவிட்டு
படகிலே பந்தலிட்டு
பந்தலிலே உன்னையிட்டு
பரவசமாவேன் தேன்சிட்டே..!
நெற்றியில் சந்தணப்பொட்டு
வச்சிகிட்ட சின்னசிட்டே…
கட்டிலிலே வந்தமர
கட்டிவந்தாய் காஞ்சிப்பட்டு…!
கூந்தலை கையால் கோதி
கன்னத்திலே காவியம் பாடி
மன்னவளே இடம் கொடு
மதன காம போர்தொடுக்க..!