தாலாட்டு

மூடி வைச்ச பானைக்குள்ளே - முத்தாய்
உன்னை கண்டு எடுத்தேன்
பூ விலங்கு போட்ட மச்சான்
தாவி வந்து பார்க்கைல -தங்க
நிலா வாட்ட நீ சிரிக்க
கா காசு கட்டமா கரண்ட்
வந்தாப்போல பளுச்சுன்னு ஆச்சுதையா
உங்க அப்பன் கட்டின மண்குடிசை.