புதிய மனைவியை எப்படி கையாள்வது
கற்பனையில் ரசித்த
பெண் என எண்ணிப் பழகாதே
கற்பனை வேறு உங்கள் மனைவி வேறு
மனைவியை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
பூ ஒன்று மலர்வது போல் அவளை நோக்கு
அவளின் நடையில்
குணத்தில் சிரிப்பில்
என்ன உண்டென்று அவதானியுங்கள்
என்ன வேண்டும் என அவளைக் கேட்காதீகள்
அவளின் விருப்பத்தை புரிந்து செயற்படுங்கள்
என்றுமே குழந்தையென உங்கள்
பார்வையை செலுத்துங்கள்
அவளின் குறைகளை மட்டும்
தெரிந்து தெரிந்து சொல்லாதீர்கள்
இந்தப் பாவையை எப்படி மேலும்
அழகுபடுத்தலாம் என சிந்தியுங்கள்
எவரின் மனைவியுடனும் அவளை
ஒப்பிட்டு கதையாதே
அவள் அழகான நேரத்தில்
அவளை அழகி என பார்வையால் காட்டு
கையால் தேநீர் தரும் வேளையில்
கையையும் புகழ்ந்து கூறு
யாரும் தேடி அவளை வந்தாலும்
நித்திரை என்றாலும் அவளைக் குழப்பாதே
உன் மனைவியின் துயரை உண்மையாய் காதலி
வாயால் மட்டும் செய்வேன் என பல முறை கூறாதே
அறிந்து செயற்படு அடுத்த வேலையை
என்ன வேலை என அவளிடம் கேளாதே
புரிந்து செயற்படு
அவளின் ஆடை அழகில் முதலிலே திருத்த முனையாதே
இது நல்லதல்ல என நேரே சொல்லாதே
அவளின் அலங்காரத்தை சுதந்திரமாய் விடு
அவளின் விருப்பத்தை தடைப் படுத்தாதே
கண்ணில் தெரியும் நேரமெல்லாம்
மனைவியை காதலி
சொர்க்கம் ஒன்று வீட்டில் வரும்
கதிரையிலும் தேநீர் வரும்
மெத்தக் கவனமாய் மனைவியை கவனி
நித்தம் நிம்மதி வீட்டில் வரும்