online காதல்

வழக்கம் போலவே
அன்றும்
அவள் ...
Facebook ல்
Login செய்ய
ஒரு
Friend request
அவளும்
Accept கொடுக்க
அவனும்
குஷியாகிறான்...!

Hii..thanks for accepting
என தொடங்கும்
பரிமாற்றங்கள்....
உனக்கு என்ன பிடிக்கும் ...?
எனக்கும்...அதே தான்
எப்படி ...?
Same sweet...
என நீளும்....!

என்னங்க ...
வாங்க ...
என தொடங்கி ....
நீ ... வா ....போ...
என மாறும்....!

அவன் நச்சரிப்பான்
நம்பர் கேட்டு
அவளும்...
xxxxxxxxxx என்பாள்...
அடுத்த நொடி
Unknown number calling
Hello என்பாள் அவள்...
Sweet voice என்பான்...!

Whatsapp ல்
தினம் 1000 Message
அனுப்புவார்கள்...!
ஒரு நாள்
Meet pannalama ...?என்பான்
அவளும் ok என்பாள்...!

பார்த்தவுடன் ...
You are beautiful என்பான்...
அவளோ வெட்கத்துடன்
போங்க...என்பாள் ...
நீங்க கூட handsome தான் என்பாள்..!

ஒரு நாள்
அவன் love you என்பான்...
இதை சொல்ல இவ்வளவு நாளா ...?
Me too love you da என்பாள்...!

நேரம் காலம்
தெரியாது
கொஞ்சிக்கொள்வார்கள்...
காதல் சொட்டும்
பேச்சு விடியும் வரை
கூட தொடரும்...!

ஏதோ ஒரு சண்டை வரும்...
வார்த்தை முத்தி
Hate you என்பார்கள்
பேசாமலே இருப்பார்கள்...
ஒருவர் Online வந்தால்
இன்னோருவர் offline போவார்...!

இப்படியும் சில காலம் போகும்...
ஒரு நாள்...
நமக்கு செட் ஆகாது...
Let us break up ...
Don't disturb ...!
Good bye
என முடியும்
அவர்களின் காதல் கதை...!
(இப்படியும் சில காதல்...)
-கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (5-Jun-16, 1:44 pm)
பார்வை : 746

மேலே