விபச்சார தாய்மை

வீதி அடங்கிரிச்சு
வேலையெல்லாம் முடிஞ்சிரிச்சு
சாக்கடை திருவாடை
வீடு வந்து சேர்ந்திரிச்சு
வெளக்கேத்த வாங்கி வச்ச
லாம்பொயிலும் தீந்திருச்சு

குளிச்சி வெளியிறங்க
குழாயடிக்கு நான் போனா
அங்க வாற தண்ணியில
அரப்பொழுது குளிக்கோணும்

பெயருக்கு சேல என்டு
ரெண்டு துண்டு இருந்தாலும்
மனசாற போடுறது
மஞ்ச சேல ஒண்டத்தான்

கண்ணாடி பார்த்து
கண்ணுக்கு மை பூசி
சிகப்புக்கலரெடுத்து
ஒதட்டுக்கும் பூசிக்கு

நான் பெத்தவன பாத்துக்கோ னு
பத்தியமே இல்லாம
பதறிக்கிட்டு குடிச சாத்த
போய் வாடி பாத்துக்குறேன் னு
பார்க்காம எங்கம்மா
பாக்கோட சொல்லிச்சு

கைப்பைய ஒரு கைல
குடையோட நான் ஏந்தி
"காசி" கட அட்டையோட
கட்டயோட நான் நின்னன்

இடுப்பு தெரியனுமாம்
செகப்பா இருக்கனுமாம்
காத்தோட சேல விலகினா
மார்போட குழி தெரியனுமாம்
நெத்தியில ரெண்டு முடி
சுருண்டு கிடக்கணுமாம்
வளைவோட வதனமெல்லாம்
வடிவா தெரியணுமாம்

எங்கையா என்ன காட்ட
அந்தையா தலையாட்ட
வெள்ளயா வேன் ஒன்னு
என் கிட்ட நின்னுக்கிச்சு
கதவு ஒரு திணுசா
ஆராத்தி எடுத்துக்கிச்சு
கைய புடிச்சு அவன்
அணச்சு எடுத்துக்கிட்டான்

ஒத்த கட்டில் மெத்தயோட
ஒன்னு ரெண்டு கிளிசலோட
ஓரமா கட்டி வச்ச
கொசு வலையும்
ஒத்த ரூபா கத்தயோட
ரெண்டு மூனு கிளிசலோட
ஓரம் கட்டி வச்ச
நானும்
பொறுமையா காத்திருந்தம்
பாவி மகன் வரும் வரைக்கும்

பக்குவமா உள்ள வந்து
சீக்கிரமா கதவு சாத்தி
விளக்க அணச்சி அவன்
விரல் மேல கைய வச்சான்
விடல ஒடம்புக்கு
வேருத்து போயிருச்சு
மெல்ல மெல்ல வந்து அவன்
முடி கோதி அணச்சி என்ன
மூச்சு முட்ட ஒதட்டு மேல
மூண்டு முறை
முத்தம் தந்தான்

நான் பெத்தவன
முத்தமிட மறந்த குத்தம்
மொத்தமா வந்து
உறுத்துது என்ன!!

காதோட வாய் பதிச்சு
பின்னால அவன் நின்னு
ஆலிங்கன பிழிகையில
காதலன் கல்லூரியில
கட்டிப்பிடிச்சு என்ன
கண்ணீர் கசிய
சொன்ன கதை
இன்னமும் எங்கிருந்தோ
ரகசியமா கேட்குதெனக்கு

சித்திரமா என் நெஞ்ச
நாவால தொடுகையில
பத்திரமா என் பிள்ள
பசியாற பால் குடிச்ச
பழைய கதையும் நினப்பு வருது

சரசத்துக்கு முடிவு வைக்க
சாய்த்து என்ன புணர்கையில
கண்ட வலி
தொப்புளோட நான் கொண்ட
பந்தத்த பிரிச்செடுக்க
பத்து பேரு சுத்தி நின்னு
பிரசவம் எண்டு பெயர் வச்ச
அந்த புனித வலிய
நினைவுக்கு தந்திருச்சு

செத்து பொழச்சி
நான் ஒளச்ச அஞ்ச பத்த
தொலஞ்சிராம
தோள்பைல போட்டுக்கிட்டு
தொட்டிலோட தூங்குகிற
என் பிள்ளய பார்க்க
நான் போறன்

நாளைக்கு அவன் படிச்சு
நல்ல ஆளா வந்தாலும்
விபச்சாரி மகன் னு
ஊர் சொல்லும்
யாருக்கோ பொறந்தவன் னு
நாடு சொல்லும்

என்னோட போகட்டும்
உன்னோட அப்பன் கதை
சொன்னா நாட்டோட வாரிசு
வப்பாட்டி வழி எண்டு
ஒலகமே சொல்லும்

எழுதியவர் : இன்ஸிமாமுல் ஹக் (5-Jun-16, 9:47 pm)
Tanglish : vibacchara thaimai
பார்வை : 622

மேலே