என்னிடம் இருப்பது உன் நினைவுகள் மட்டும்தான் 555

என்னவளே...

நீ ஒருமுறை என்மேல்
வீசிய பார்வைக்கு...

நிஜமென நினைத்து
உன்னை தொடர்ந்தேன்...

என் நிழலை விட்டுவிட்டு
உன் நிழலுடன் நடந்தேன்...

என் இரு விழிகளாக நீ
இருப்பாய் என்று நினைத்தேன்...

என் பார்வையை
உனக்காக இழந்தேன்...

உன்னருகில் நான் வரும்
போதெல்லாம்...

நான் மௌனமானேன்...

நீ நான் எதிர் பார்க்கும்
வார்த்தையை சொல்வாய் என்று...

நான் உன் பார்வையில்
மூழ்கினேன்...

நீ என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடுகிறாய்...

என்னோடு நீ இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...

உன் நினைவுகளை மட்டும்
திரும்ப கேட்டுவிடாதே...

என்னிடம் இறுதியாக
இருப்பது நினைவுகள் மட்டும்தான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Jun-16, 8:14 pm)
பார்வை : 714

மேலே