டேய் தூசுமன்னு
@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@
டேய் தூசுமன்னு, தூசுமன்னு இங்க வாடா.
@@@
இதோ வந்திட்டன் பாட்டி. என்ன எதுக்கு தூசுமன்னுன்னு கூப்பிடறீங்க? எம் பேரு துஷ்மன். சினிமா நடிகர் ஒருத்தர் ஸ்ரீமன் –ன்னு இருக்கற மாதிரி எனக்கு என்னோட அப்பா, அதாவது உங்க மகன் எனக்கு துஷ்மன் –ன்னு பேரு வச்சிட்டாரு.
@@@
அந்த தூசுமன்னுக்கு என்னடா அர்த்தம். பேரா?
@@@
அதுக்கு என்ன அர்த்தம்னு எங்கப்பாவுக்கே தெரியாது. தமிழ் நாட்டில எலலாம் இந்திப் பேர வைக்கறாங்கன்னு என்னோட அப்பாவும் ஒரு இந்தி தொலைக்காட்சி தொடர் பார்த்தாராம். ஒரு இந்திப் பேரத் தேடத்தான். ஒரு தொடர்ல ஒரு இளைஞனை நாலஞ்சுபேரு தொரத்திட்டு போயி துஷ்மன், துஷ்மன் –ன்னு கூப்பிடுவாங்கலாம். அந்தப் பேரு எங்கப்பாவுக்கு பிடிச்சி போச்சாம். நான் பொறந்து நாலு நாள்லயே எனக்கு துஷ்மன் –ன்னு பேரு வச்சராம்.
@@@@
அது என்னமோ போங்கடா, நீயும் உங்கப்பனும். நம்ம தாய் மொழிலே ஒரு நல்ல பேர வைக்கத் தெரியாத துப்புக்கெட்டவன் எனக்கு மவனாப் பொறந்துட்டான். வெக்கப்படறதைத் தவர வேற வழியில்லடா பேரா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. செம்மொழியாம் நந்தமிழின் சிறப்பறியார் தமிழர்களே இல்லை.
@@@@@@
############
दुश्मन {dushman} = ENEMY – துஷ்மன் = பகைவன், எதிரி