பெண்ணின் பெருமை

பெண் கர்ஜிக்கிறாள்
பெண் நாடகமாடுகிறாள்
பெண் நாட்டியம் ஆடுகிறாள்;

பெண் சண்டையிடுகிறாள்
பெண் ஜெயிக்கிறாள்
பெண் அழுகிறாள்;

பெண்ணின் பெருமை
தன்னை அறியாமல்
கண்ணீரில் கரைகிறது!

பெண்ணின் வாழ்வு
பெண்ணின் தனிமை
பெண்ணின் நடப்பு;

பெண்ணின் கனவு
பெண்ணின் பழக்க வழக்கம்
அண்டை அயலாரிடம்?

பெண்ணின் பெருமை
வெளி உலகம் அறியாமல்
தடுமாறுகிறது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-16, 5:09 pm)
Tanglish : pennin perumai
பார்வை : 596

மேலே