அன்றும் இன்றும்

அன்றொரு நாள்...
அது கிராமத்தின் சாலையோரம்
அழகாய் விரிந்து கிடந்தது பச்சை வயல்
சில்லென்ற காற்றும்
கீச்சிடும் பறவையும்
சலசல என ஓடும் நீரும்
அள்ளி தந்தது கோடி சுகம் சுகம்...

இன்று...
அதே இடம்
கம்பீரமாய் முளைத்து நிற்குது கட்டிடம்
கல்வி புகட்டும் கல்விக்கூடம்
காற்றில் கலந்து வருகிறது ஓர் குரல்
காதை எட்டுகிறது "டூ நாட் கட் ட்ரீஸ்"
வகுப்பறையில் ஆசிரியர்!

எழுதியவர் : ABINAYAGOMATHI (10-Jun-16, 12:00 am)
Tanglish : anrum intrum
பார்வை : 111

மேலே