மலராத மொட்டு
அழகிய மலர்த் தோட்டம்,
சின்னஞ்சிறு மலர் மொட்டு
ஒன்று தாய்ச் செடி விட்டு
காம்புடனே பறிக்கப்பட்டது!
மாளிகையின் முற்றத்தில்
எளிய ஒரு கண்ணாடிப் பூச்சாடியில்
மற்ற மலர்க் கூட்டத்தின் மத்தியில்
ஒற்றை மொட்டு சொருகித் திணிக்கப்பட்டது!
உரிய இடம் தனக்குப் போதவில்லையே - மற்ற
பெரிய மலர்களோடு போட்டியிட முடிய வில்லையே!
கவையில் முற்கள் குத்துவதும் தாளவில்லையே - எனக்குத்
தேவையான நீரும் கிடைக்கவில்லையே!
கூட்டம் நிறைந்த பூச்சாடியிலே
சற்றுக் கூட மூச்சு விட முடியவில்லையே!
மலர்ந்து மணம் வீசாமலே நானும்
வாடி வதங்கி உதிர்கிறேனே!