சிக்கி முக்கி காதல்

தலைவி இங்கு தனித்திருக்கையிலே
தலைவன் வந்து பேச மறப்பதேனோ?

விழித்த விழியிங்கு விழித்திருக்கையிலே
திருவாளன் வந்து திருட மறுக்குறானே
சொந்த தங்கத்தை என் அங்கத்தை

தினம் வன் செயல் செய்த உன் கைகள்
சும்மா இருப்பதேன் இன்று?

வெற்றிலைக் கொடியும்
கொடிக்கால் மரமும்
எந்நாளும் இங்கு
பிண்ணிப் பிணைந்திருத்தல் தீதோ?

மண்ணும் விண்ணல்லவே
தினம் நாம் விலகிருக்க

காற்றும் மழையும் வானும் நிலவும்
மண்ணும் மரமும் நீரும் வேரும்
மீனும் நீரும் நீயும் நானும்

தீராத மோகத்தால் தினம் நான்
உனை அடைந்தேன்
தணியாத தாகத்தால் தினம் நீ
எனை அணைத்தால் தாங்காத எந்தேகம்?

உனக்கு எனக்கும் இடையில்
உள்ள உறவின் தொடர்வு
இருட்டுக்குதானே தெரியும்!

இதுதானே தமிழரின் பண்பாடு
இன்று நீ என்னோடு விளையாடு

எத்தனை நாட்களாய் ஏங்கித்தவிதேன்
அன்பே உனக்காக
அத்தனை நாட்களும்
நீயென் அருகில்தானே இருந்தாய்
அழகே என் நிழலாக!

காதலன் உனக்கும் காதலில் எனக்கும்
இடையில் ஒரு யுத்தம் எந்நாளும் நடக்கும்
ஒருவரோடு ஒருவர் சிக்கி முக்கிக் கல்லாய்
ஒட்டி உரசி முட்டி மோதி இன்பம் பெறலாம்

உந்தன் சுக்கிலமும் எந்தன் சுரதமும்
வெளியாகும் காலம் ஒன்றானால்
அதுவே சமகால போகம் என்றாகும்

கணவன் மனைவிக்குள்ளே
கோப தாபம் வருவது சகசம்
ஊடலுக்குப் பின் கூடல்தான் இன்பம்

உடலை விட இங்கு
ஆன்மா திருப்தியடைய வேண்டுமாம்
பெண்களுக்கு!

ஆன்மாவை விட உடல்கள்
திருப்தியடைய வேண்டுமாம்
ஆண்களுக்கு!

மனம் விட்டு மனம்மாறி பேசாதவரையில்
எப்படி தீரும் துன்பம்?

வாழ்வில் இடம்விட்டு இடம்மாறி
தினம் நகர்வதா நாகரீகம்?

இருக்கும் இடத்தை சுத்தம் செய்து
கிடைத்ததை வைத்து இன்பம் துய்த்து
வாழ்ந்து பார் காண்பாய் சொர்க்கம்

தொட்டுத் தொடரும் உறவுகள் என்றும்
உன் வாழ்க்கையைதான் கெடுக்கும்
விட்டுக் கொடுக்கும் உறவுகளால்தான்
உன் வாழ்க்கை இனிக்கும்...

பெண் உடலுக்கு மயங்கும் ஆணாக இருந்தால்
தன் உடலைக் கொடுத்து
உன் ஆன்மாவைப் பறிப்பால் பெண்

பெண் உடலுக்கு நீ
மயங்காதவனாக இருந்தால்
உன் ஆன்மாதானே மெய்

பெண் உடம்பல்ல மெய்
ஆதலால்தானே
காதல் கவிதையில் நுழைந்தன பொய்

காதல் என்பது மெய்
காதல் மட்டும்தான் என்பது பொய்
காமம் இல்லையென்றால்
எந்த இனம் பெறுகும்
இந்தப் பூமியில்...

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Jun-16, 5:01 pm)
Tanglish : sikki mukki kaadhal
பார்வை : 109

மேலே