திருட்டு இராணி
தென்றல் எனைக் காணமல்
மலரென வாடினாய்
நிலவென தேய்ந்தாய்
பனியென உருகினாய்
என் உயிராய் நினைத்து
உன்னோடு தினம்
உறவாட வந்தவனை
அனுமதித்தாயா?
இதுவரை
யாரையும் கண்டு பிரமிக்காத
என் நெஞ்சை
பிரமிக்கச் செய்தது நீதானே!
பின் என்னைக் கண்டு
இன்று மெளனம் கொள்வது
ஏன் மானே?
அணுவணுவாய் என்னை
கொள்வதுதானே உன் எண்ணம்!
கண்கள் கண்ட மறுநோடியில்
என்னை எப்படி திருடினாய்?
எனக்கே தெரியாமல் எனக்குள் புகுந்து
என் இதயத்தை எதற்கு தாக்குகிறாய்?
அடியே திருட்டு இராணி
என்னை திருடிட்டுப் போ நீ !
அதற்காகாத்தானே
இந்தப் பார்வை பார்க்கிறாய் நீ!

