ஒரு நாள் ஒரு இரவு ஒரு ஜீவன்

இருள் சூழ்ந்த இரவு
ஆள் அரவமில்லா தெரு
என் நாயகன் எனை அழைத்துவந்தான்
விட்டுச்சென்றான்
ஓர் சிகப்பறையில்
என்ன ஏது என்று அறியவில்லை நான்
அவ்வறையின் அலங்கோலங்களை காணும் பொழுது தான் புலப்பட்டது.
இது என் பெண்மைக்கு
ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோதனை என்று


நான் நினைத்து நினைத்து விம்மி அழுதது தான் மிச்சம்
எனை இச்சையுடன் எச்சமாக்க
யாரோ ஒரு அரக்கன்
கதவை திறக்கிறான்

என் அருகே நெருங்கி வருகிறான்
என் குலை நடுங்குகிறது
என் பெண்மைக்கு இழுக்கு வந்துவிடுமோ
எனை தொட முற்படும்
இந்த ராட்சனுக்கு கேடு வராதா
என்று மூளை யோசித்துக் கொண்டே இருக்கிறது

அவன்
எனை தொட முயற்சிக்கையில்
அவன் கையை
மறித்து
" நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்
ஒன்றே ஒன்று வினவுகிறேன்
அதற்கு விடையை
என் கணவனிடம் கேட்டுவிட்டு வா

பார்க்கலாம்

எங்கேயும்
ஓடிவிட மாட்டேன்
இங்கே தான் இருப்பேன்.


எனை நீ
எங்கெங்கு தொடுவாய்
என்று கூறிவிட்டு

நான் சொல்வதையும்
சொல்

எனை என் கணவனை
தவிர வேறு யார் தொட்டாலும்
நான் செத்த பிணத்திற்கு சமம்

மீறி வேறு எவன் கை
என் மீது பட்டாலும்
நான் அவனையும் கொல்வேன்.
என் கணவனையும் கொல்வேன்.

உனை நம்பி வந்த பெண்ணை இப்படி
நிராயுதபாணியாய்
நிற்க வைக்கிறாயே நீ எல்லாம் ஒரு கணவனா?

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு செத்து மடியலாம்
என்று கூறிவிட்டு வா"

அவன் வெளியில் போனதும்.
நான் எனை தற்காத்துக் கொள்ள
அறையில் ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன்.
தேடல் வீண்போகவில்லை
ஆப்பிள் வெட்டும் கத்தி கையில் சிக்கியது
நான் எடுத்து
இடுப்பில் சொருகி ஒளித்து வைத்துக்கொண்டேன்

மீண்டும்
காலடி சத்தம் கேட்கிறது

என் கணவரும்
அவனும்
அறையில் பிரவேசிக்கிறார்கள்

என்னருகில்
அவர் வந்து
எனை மன்னித்து விடுடி
நான் பெரிய தவறு இழைத்துவிட்டேன்.
வா வீட்டிற்கு போகலாம்.
என்று கட்டி பிடித்தான்.
நீ காலையில் இருந்து
ஒன்றும் சாப்பிடவில்லை
இந்த பாலை குடி
வீட்டிற்கு போனால் சாப்பிட ஒன்றும் இருக்காது.

எனக்கு எதுவும் வேணாம்
இங்க இருந்து போனா போதும்.
நான் போறன்.

தாலி கட்டின புருஷன்னு
பாக்கறன். இல்லனா
இத மாதிரி பண்ணதுக்கு உங்கள கொன்னு புதச்சிடுவன்.

நீங்க வர்றீங்களோ வர்லயோ .
நான் போறன்.

இந்த கிளாஸ் பால மட்டும் குடிச்சிடுடி போலாம்.
வேணாம்
குடிடி
வேணான்னு சொல்றன்ல.

கேக்க மாட்ட
உனக்குலான் வாயால சொன்னா பத்தாது
கிளாஸை உடைக்கிறான் அவன்
எனை குத்த இருவரும் முயல்கையில்
நான் கத்தியை கையில் எடுத்துக்கொண்டேன்.

அவர் பாசமாக பேசுவது போல் என்னருகில் வந்து.
பணம் வாங்கிவிட்டேனடி
நீ மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை
என்றால் எனை கொன்றிடுவார்கள்
என்னோடு உன்னையும் கொன்று புதைத்திடுவார்கள்.

அவன் யார்டா
கொல்றதுக்கு
நானே கொல்றன் உன்ன என்று கத்தியை ஓங்கினேன்.
சதக் என்று குத்தினான் கணவனும் அவனும் என்னை.

எனை கட்டிலில் பிடித்து தள்ளிவிட்டு
அந்த சிவப்பறையில்
பச்சைகொடி காட்டினான் கணவன்.
இச்சைகொண்டு வந்தான் அந்நியன்.

என்னால் எழ முடியவில்லை.
ஆனால் எனக்குள் ஒரு வேகம் தானாகவே வருகிறது .
கட்டிலில் வந்து படுத்தவனை கத்தியால் நெஞ்சில் குத்தினேன்.
வெளியே சென்று கணவனை தேடி
அவனையும் குத்தி சாய்த்தேன்.

அந்த அசிங்கம்
பிடித்த இடத்தில்
ஒரு நிமிடம் கூட
இருக்கக்கூடாது என்று
வெளியேறினேன்.

அந்த இரவில் ரத்தம் சொட்ட சொட்ட
நடந்துகொண்டிருந்தேன்
போகும் பாதையில்
ஒரு கோவில் எனை உள்ளே அழைத்தது(கோவிலை நான் பார்த்ததும்.மனம் கோவில் உள்ளே போக
சொன்னது.எனக்கு மிகவும் பிடித்த இடம்.
என் தாயின் கருவறை போல் மிகவும் பரிசுத்தமானது.நான் வரும் வேளைகளில் என் தாய் எனை தட்டாமல் தாங்கிகொள்கிறார்.
எனை பரிசுத்தமாக்குக்கிறாள் என் தாய்.)

என் தாய் எனை உள்ளே அழைக்கிறாள்.
நான் அவள் அருகில் இன்னும்
பரிசுத்தமானவளாகிறேன்.
அவள் மடியில் படுத்துக்கொண்டேன்.
காலில் விழுந்து அழுகிறேன்.

என் தாய் மடியில் போட்டுக்கொண்டு கண்ணீரை துடைத்திட்டாள்.
என் தாயின் மடியில்
படுத்துவிட்டேன்.
என் தாய் எனை எழுப்பவே இல்லை.

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Jun-16, 10:53 am)
பார்வை : 321

மேலே