நூலேணி
வானத்தைத் தொட நீலத்தை நிலவைத் தொட்டிட
ஒரு ஏணி தேடினேன்...
கிடைக்கவில்ல
பூமியில் உயர்ந்திட உயரம் தொட்டிட
ஒரு முதுகு ஏணி தேடினேன் ....
கிட்டவில்லை
தமிழ் சொர்க்கத்தை தொட்டிட அடைந்திட
ஒரு ஏணி தேடினேன் ...
எழுத்தெனும் நூலேணி என் முன் விரிந்தது !
------கவின் சாரலன்