பார்வையானாள் பார்க்கும் அழகானாள்
உயிர் எழுத்தாலும் மெய் எழுத்தாலும்
உருவான தமிழ் மகள்
வல்லின, இடையின, மெல்லின
எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து
செதுக்கிய வார்த்தைகளால்
எழிலான உயிர்ச் சிற்பம் ஆனாள்!
அந்த உயிர்ச் சிற்பத்தை பார்க்க
தமிழ்க் கடலில் நீந்த வேண்டுமென்று
படிக்க நூல்களை வரவழைத்தேன்! ---
நண்பர்களிடமிருந்து!
நூலகத்திலிருந்து!
அஞ்சலிலும் வரவழைத்தேன்
விலை கொடுத்து
எந்நேரமும் வீட்டில்
அழகு தமிழைப் படித்து படித்து
விழிகளிலே தமிழ் தங்கி விட்ட
உணர்வு வாழ்கிறது!
அதனால் ----
இயற்கையின் அழகையும்
உறவின் அழகையும்
நட்பின் அழகையும்
பாசத்தின் அழகையும்
தியாகத்தின் அழகையும்
தேச பக்தி அழகையும்
தெய்வ பக்தி அழகையும்
எந்த அழகையுமே
தமிழ் மகளாய் பார்க்கின்றேன்!
விழிகளிலேயே தங்கிவிட்டதால்
இவளை--
என் பார்வை என்று சொல்லவா?
அன்றி ---
எந்த அழகையும் தமிழாகப் பார்ப்பதால்
பார்க்கும் பொருள் என்று சொல்லவா?
அழகிய தமிழ்மகள்தான் இவள்!