அழகிய தமிழ் மகள்
ஒப்பனை தேவையில்லா
ஒப்பிலா அழகி இவள்!
கற்பனைக் கடல் முழுதும்
வர்ணனைமுத் தெடுக்கவைப்பாள்!
இயற்கையை அவள் காட்ட
இயற்கையாய் அவளைக் காண்போம்!
அறிவியலை அவள் புகட்ட
அறிவிறையாய் வணங்கிடுவோம்!
சரித்திர காலத்துக்கு
சிறகுகள் தருவதினால்
சரித்திரம் போற்றும் மொழி
என்றே பெருமை கொள்வோம்!