அழகிய தமிழ் மகள் அவளோ
சீவிய கூந்தலின்
வீசிய வாடையில்
பூசிய மஞ்சளில்
ஒளிரும் தேவதை அவளோ
முத்துக்கள் உதிர்க்கும்
புன்னகையை பொன்னகையாய்
அணிந்த அணிகலன் அவளோ
பூக்களின் இதழாய்
அழகிய இதழ்களை
ஒரு சேர கொண்டவள் அவளோ
கண்டதும் மயக்கும்
உலகின் பேரழகி அவளோ
காரிருளின் நிறத்தில்
கவர்ந்து இழுக்கும்
காந்தக்கன்னியும் அவளோ
படைகளை உடைக்கும்
இடையின் பல்கலை அவளோ
செல்லெல்லாம் ஈர்க்கும்
இனிமையான குரலினை
கொண்டவள் அவளோ
ஆறாக ஊற்றெடுக்கும்
காதல் தாகத்தின்
வற்றாத நதியும் அவளோ
இன்பத்தினை ஐந்திணையிலும்
திகட்ட திகட்ட
புகட்டும் உயர்திணை அவளோ
வில் லென கொண்ட
புருவத்தில்
காதல் அம்பினை கொண்டவள் அவளோ
என் கன வினை
ஏந்திச் செல்லும்
ஏவு கணை அவளோ
மொத்தத்தில் எனை கற்பனையில்
மிதக்க வைக்கும்
அழகிய தமிழ் மகள் அவளோ!!!!

