வழித்துணை

நீண்ட பாதையொன்றை தேர்ந்தெடுக்க வியலாது
நீண்டு குறுகிய பாதையிலேயே பயணம்
இடையில் இடையிடையில் இன்முகம் காட்ட பலர்
இடித்து தள்ளும் சிலருக்கும் குறைவில்லை
கைகள் துழாவிக் கொண்டே இருக்கிறது இறுக பற்றிக் கொள்ள ஒரு வழித் துணையை
பால் பாகுபாடின்றி
ஊசலாடும் மனமில்லை
ஊஞ்சலில் வைத்து கையெட்டும் தொலைவில் களிப்பாய் அசைத்திட ...
தேடும் கண்கள் திரும்புகின்றன துவங்கிய இடத்திற்கே

எழுதியவர் : அகராதி (16-Jun-16, 1:23 pm)
Tanglish : vazhithunai
பார்வை : 433

மேலே