உந்தன் பாதத்தால் எந்தன் நெஞ்சில் மிதிடா

முங்கி முத்துக்குளி
எந்தன் நெஞ்சில் கை வைத்து அமுக்கி

எந்தன் தேகம்
உந்தன் கையில்
புனிதமாகும்

உந்தன் உதடு
தீண்டாத இடமும்
உண்டோ
எந்தன் மேனியில்

தீபம் என்றால் அணைய வேண்டும்
உயிரை நீயும் அணைக்க வேண்டும்


இதயத்தின் கதவுகளை சாத்திவிடு
உன்னில் படுத்துவிட்டேன்
உயிர் ஜோதியை அணைத்திடு
என்னை புதைத்திடு
உன்னில்

உந்தன் கூந்தலில்
என்னை துவட்டிவிடு
அந்த வானவில்
எந்தன் விழிகளிலே

கரைந்து போகும் மேகம்
கரையாது எங்கள் மோகம்

மறைந்து போகும் பூ வாசம்
மறையாது எங்கள் நேசம்

வானவில் அவள் வளையல்
வானம் அவன்
நெஞ்சம்

உயிரை எந்தன் பெயரில் தந்திடுவாள்
அவளே எந்தன் காதலி
உயிர் காதலி
உயிரை காதலி

உணர்வில் என்னை
சுமந்திடுவான்
கண நேரமும் என்னை
கனவிலும் நினைத்திடுவான்
அவனே எந்தன் காதலன்
அன்பு கணவன்
எந்தன் உயிர் தோழன்

காற்றில் தவழும் இலை
என்றும் அவனே என் மூத்தபிள்ளை

என் தாய்க்கு
ஆண் உருவம் கிடைத்தது
அவனால்
அவனே என் தாயும் ஆனவன்
எந்தன் தலைவன்

உந்தன் மார்பில்
மரித்துபோவேன்
காலடியில் உதிர்வேன்
உனை கட்டிக்கொண்டு

உந்தன் பாதத்தால் எந்தன் நெஞ்சில்
மிதிடா
வஞ்சி நான் பஞ்சாகி போவேனடா



~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-Jun-16, 12:22 pm)
பார்வை : 96

மேலே