சொல்ல தோனுது

புதுமை விரும்பிகளின்
பொக்கிசம் நீ.
................
தேடலில் புதையுண்ட
புதையல் நீ.
.................
தேடி வருபவர்களையும் ஈர்த்துக்
கொள்ளும் புதைகுழியும் நீ.
...............
வாசம் வீசும் மலர்களில்
வாடா மலரும் நீ.
...............
அழகின் வறுமை உணரும் நெஞ்சத்தில்
வஞ்சம் வளர்ப்பவள் நீ.
..............
படைக்கபடாத படைப்புகளுக்கு பார்வையில்
உயிர் தந்தவள் நீ.
..............
மதியும் நிதம் உன் நுதல் தேடுவதால்
இரவையும் இரவல் கேட்க வைத்தவள் நீ.
............
எங்கே எப்போது எதனால் எப்படி என்று
தெரியாமல் பெண்மையின் ஆதிக்கத்தை
என்னுல் செலுத்திய அறிய படாத உணர்வுகளின்
அறிய படைப்பு நீ.
............

எழுதியவர் : மதி (16-Jun-16, 8:24 pm)
பார்வை : 301

மேலே