இசையாகி
வினா முடிவதில்லை
விடை முடியும்வரை
தீக்குச்சியாய்
உரசி
எரிந்து
அணைவோம்
இலையாய்
தளிர்விடுவோம்
தழைத்திடுவோம்
உரமாவோம்
வண்ணம் இழக்கும் மேகம்
எண்ணம் யாவும்
நடக்கும்
தேசக் கடலில் மூழ்கி
தேகக் கரையில் சேர்வோம்
ஆகாயம்
பூபந்தல்
ஆனந்த
தேன் சிந்து
ஆராரோ ஆரிராராரோ
இசையாலே
புலனெல்லாம்
சிலிர்க்க
சிலிர்க்க
குளிர் காயும்
நெருப்பை மூட்டினாய்
விழியால்
பல்லவி
கீர்த்தனை
சரணம்
சுருதி
தாளம்
தருவது இசையே
இசையின் மொழியே
நீயே
ஸ்வரமே
சாருகேஷியா
தோடியா
பூபாளமா
ஷண்முகப்பிரியாவா
இல்லை
கீரவாணியா
ஒரு சொட்டு அமுதை
யாசித்து
சமுத்திரம்
மேவுவது
தான் உசிதம்
நஞ்சாய்
இருந்தாலும்
நாங்கள்
கைகோர்த்து
ஏற்று சமாளிப்போம்
பொங்கி வரும் கடலை
அடக்குவது இயலாது
காட்டாற்று வெள்ளத்தை
அணைபோட்டு தடுக்க முடியாது
சுற்றிடும் உலகை.
நிறுத்த முடியாது
காற்று வரும் திசையை
அறிய முடியாது
இவை போலே தானே
நம் அன்பை எவராலும் பிரிக்க முடியாது
~ பிரபாவதி வீரமுத்து