கண்ணாடி

உன் கண்களிடம் இருந்து
யார் கண்களை
பாதுகாக்க
எப்போதும் கண்ணாடி
அணிந்திருக்கிறாய் ?


உனக்கு ஒன்று
தெரியுமா ?
உன் கண்ணாடி திரை
எப்போதுமே மறைத்ததில்லை
உன் கண்கள்
என் உயிர்
உறிஞ்சிக் குடிப்பதை !

எழுதியவர் : அனுசுயா (18-Jun-16, 12:45 pm)
Tanglish : kannadi
பார்வை : 124

மேலே