இது தான் காதல் என்பது

காய்கறி நறுக்கினேன்
வெங்காயம் நறுக்கும் பொழுது
என்னுடன் நீயும் அழுதாய்
காரணம் கேட்டேன்
தெரியவில்லை என்றாய்

காரணம் அறிந்த நானோ
சிரித்தேன்


படகில் போய்க் கொண்டிருக்கையில்
எனை நீரில்
தள்ளிவிட்டார்

எனை தள்ளிவிட்டதில்
எனக்கு எந்த கவலையும் இல்லை
சந்தோஷமே.
(அவர் தள்ளிவிட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
என் உயிர் எனை தள்ளிவிட்டதே என்று தான் வருத்தமாக உள்ளது என்று சாதாரண தம்பதி கூறுவது)
ஏன் அவ்வாறு செய்தார் என்று தான் புரியாமல் விழித்தேன்.
ஏதாவது காரணம் நிச்சயம் இருக்கும் காரணம் இல்லாமல் அவர் அவ்வாறு செய்ய மாட்டார்.

அப்பொழுது தான்
படகு சுழலில் மாட்டப்போவதை
பார்த்து
"பட்டு தண்ணீல குதி
தண்ணீல குதி பட்டுனு"
சொல்லிட்டே இருக்கன் அவருக்கு தல சுத்துது
தன்ன இழந்து மயக்கம் போட்டு விழப்போறாருனு
நெனச்சிட்டன்.
அவர் பக்கத்ல போய்டு
படகுல ஏறி உக்காந்து
அவர மடியில போட்டுகிட்டு
அவரையும்
படகையும்
இருக்கமா பிடிச்சிகிட்டன்

சுழல் பத்திலான் கவலையே இல்ல.
எங்கூட அவர் இருக்காரு
அவர் கூட தான் இருக்கனே
அப்புறம் என்ன
பிரச்சனை
எத்தனை புயல் காத்து
வந்தாலும் எங்கள
ஒன்னும் பண்ண முடியாது

சுழல் எங்களை சுழற்றிக்கொண்டிருக்க
நான் அவரை இருக்கிக்கொண்டேன்
சுழல் எம்மை தூக்கி எறிந்தது
இருவரும் போய் மாட்டிக்கொண்டோம்
புதை மண்ணில்
அதிலிருந்து
வெளிவரவே முடியவில்லை
நான் படுத்துக்கொண்டு
அவரை என் மீது போட்டு
நீருக்கு வெளியே
அவர் முகம் இருக்க வேண்டுமென்று
மேம்பாலமாய் உடலை தூக்கிய படியே படுத்துவிட்டேன்
அவர் எழுந்துவிட்டார்

மூச்சு முட்டுகிறது
மேம்பாலம் ஏறி ஏறி இறங்குகிறது
அவர் நீருக்குள் வந்து எனை எடுக்க முயல்கிறார்
முடியவில்லை அவரால்.
நான் வேகமா நீங்க இங்க இருந்து போங்க என்கிறேன்
அவர் எதுவும் பேசாமல்
என் உடலை நகர்த்திவிட்டு
என் அருகில் படுத்துவிட்டார்
எனை பார்த்துகொண்டே

நான் அவரை பிடிக்க முயல்கையில்
அதை அறியாமல்
அவரே எனை பிடித்துவிட்டார்
வலியேதுமில்லை
இருவருக்கும்
புதைந்துவிட்டோம்
இருவரும்
கலந்துவிட்டோம்
நீரில்

என் கை உடைந்தது
அவர் மீது விழ வந்த கிளையை தடுத்ததால்

அந்த நாட்களில் எனை எந்த வேலையும்
செய்யவிடாமல்
எல்லா வேலையையும் அவரே செய்வார்
எனக்கு பல்துலக்கிவிடுவது
எனை குளிப்பாட்டுவது
எனக்கு உடை உடுத்திவிடுவது
உணவு ஊட்டுவதென்று
எனையும் அவரே பார்த்துக்கொண்டார்

அவர் உடை உடுத்திவிடும் பொழுது
அவர் உடை உடுத்துவதிலே
நோக்கமாக இருப்பார்
நான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன்
கண்ணில் இருந்து
ஒற்றை துளி நீர் வழியும்
அது அவர் மீது விழுந்ததும் துடைத்துவிட்டு வலிக்கிறதா என்று கேட்டுக்கொண்டே மீண்டும்
ஆடை அணிவித்து
கொண்டிருப்பார்

எனக்கு அப்பொழுது
என் உடலில் உடை இருக்கிறதா
இல்லையா என்பதெல்லாம்
தெரியாது
என் மீது அவர்
வைத்திருக்கும் பாசம்
மட்டுமே தெரியும்
வெடுக்கென உடைந்த கை என்பதையும் மறந்து
கட்டிக்கொள்வேன் அவரை


ஒருநாள் மிகவும் கோபமாக வீட்டிற்கு வந்தார்
நான் அருகில் சென்று
என்ன பிரச்சினை என்றேன்
சொல்லிட்டா தீத்துவச்சிடுவியா
போடி போ
என்று எரிந்து விழுந்துகொண்டிருந்தார்
நான் சரி வாங்க
டீ குடிங்க என்றேன்
உடனே அவர்
எவ்ளோ கோவமா பேசினாலும்
உனக்கு கோவமே வராதாடி.
ஏன் வராது வரும்.
அது நீங்க உண்மையா கோபப்படும் பொழுது.
இப்ப நீங்க நடிச்சிட்டு தான இருக்கீங்க.
அவர் சிரித்துக்கொண்டார்
நான் அவரை பார்த்து புன்னகைத்தேன்.


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Jun-16, 5:23 pm)
பார்வை : 231

மேலே