கயல் துள்ளும் விழியழகி

வானத்தில் ஒரு திருவிழா
-----முகில் கூட்டங்களின் கொண்டாட்டம் !
வண்ணத் தமிழச்சிக்கு எத்தனை மகிழ்ச்சி
------பூவிதழெல்லாம் புன்சிரிப்புக் கோலாட்டம் !
பூமியில் ஒரு திருவிழா
------ஆறு கரை புரளும் பெருவெள்ளம் !
காத்திருக்கிறாள் ஆற்று வெள்ளம் அமர
-----இடையில் குடத்துடன் கயல் துள்ளும் விழியழகி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-16, 9:21 am)
பார்வை : 109

மேலே