சொல்லி அனுப்பி இருந்தால்

பழங்களை திண்று விதைகளை
தவறவிட..
பூத்து நிற்கும் பூவுக்கு உயிர் கொண்டு
சேர்க்க...
சிதைக்கும் புலுக்கலை கொத்தி
திண்ண...
அனைத்தும் சொல்லி அனுப்பிய
இறைவா!!!
கோடை வெயிலில்
போக துடிக்கும் உயிருடன்
தண்ணீர் முட்டி நிற்க்கும்
குழாயை எப்படி திறப்பது?
சொல்லி அனுப்பி இருந்தால்
நானும் சொல்லி இருப்பேன்
இறைவா
உனக்கு நன்றியை!!!

இப்படிக்கு
கொல்லும் வெயிலில்
உயிருக்காக போராடும்
சிட்டு குருவி

எழுதியவர் : க.ஹேமநாதன் (18-Jun-16, 2:12 pm)
பார்வை : 117

மேலே